5,224
 • அன்னை என படைத்தவளையும் ...மகளாய் பிறந்தெனை புண்ணியமாக்கியவளையும் நினைத்து வரைந்த வரிகள்

  335 views 1 month ago
  உதிரம் கொட்டி உயிர் தந்து பேரன்பு காட்டும் பெண் எனும் பெரும் சக்தியை
  ஆணவம் கொண்டு ஆடை கிழித்து சதை தேடும் " சில" ஆண் எனும் அரக்க புத்தி.

  அன்னை என படைத்தவளையும் ...மகளாய் பிறந்தெனை புண்ணியமாக்கியவளையும் நினைத்து வரைந்த வரிகள் இனியோர் மலர் கருகாமல் வளரட்டும்...மனிதம் மலரட்டும் !!
  #894tamilfm #rjnimmi #savehumanity #tamil #nammaradionammamusic

  காணொளியின் முழு வரிகள்

  என்று தணியும் இந்த சுதந்திர தாகம் .. என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற பாரதியின் வார்த்தைகளை மாற்றி படிக்கிறோம் !!

  என்று முடியும் பெண்மையின் சோகம் .. என்று மடியும் இந்த சதை தேடும் கூட்டம் !!

  கரு கொண்டு ..உயிர் தந்து ...உடல் போற்றி அன்னைதான் வளர்க்கிறாள் அவளுக்குதான் பிறக்கிறான் ... இன்று பெண்மையை சிதைக்கும் ஒவ்வொருவனும் .... !!

  பெற்றவன் துடிக்கிறான் ...பிள்ளையை பெற்றவன் வெடித்து வெடித்து இறக்கிறான் ...

  காலையில் சென்ற மகள் மாலை வரவில்லை ... அவள் சேதி ஏதுமில்லை .. சட்டென செய்தி உன் பூமகள் குதறி கொல்லப்பட்டாள் ...

  சாலையில் விளையாடிய 6 வயது பிஞ்சு மலரை ஒருவன் கசக்கி வீசினான் தாயவள் காய்ந்து கருகினாள்

  வேலைக்கு சென்ற தங்கையை வேலியோரம் பிணமாய் கண்டெடுத்தான் ஒரு தம்பி ...

  எங்கு பார்க்கினும் பெண்ணை தின்ன பெருங்கூட்டம் பேயன திரிந்து அலைகிறது ...

  அரசியல் பேசினார்கள் ... அறிஞர்கள் அலசினார்கள் ... ஆன்றோரும் சான்றோரும் அறிவுரை ஆயிரம் சொன்னார்கள் அதற்குள் அங்கு ஒரு மங்கை ஆடைக்காய் மன்றாடி மடிந்து கொண்டிருந்தாள் !!

  போதும் உங்கள் பொறுமை ... பெண்ணை தவறாய் தொட்டவனின் அங்கம் எடுக்க அரசானை இடுங்கள் ... சதை தேடும் சதிகாரர்களுக்கு பயத்தை கொடுங்கள் ... பெண் பிள்ளை பெற்றவர்களை நிம்மதியாய் உறங்க விடுங்கள் ... நாடும் நகரமும் மனிதர்கள் வாழத்தான் என்பதை ஒரு முறை நிரூபியுங்கள் .. உங்களுக்கு புண்ணியமாய் போகட்டும் !! Show less
  Read more
 • Popular uploads Play all

  This item has been hidden
to add this to Watch Later

Add to

Loading playlists...