Loading...

தமிழ்வழிக் கல்வி கூட்டியக்கம் சார்பில் தமிழக அரசுக்கு விண்ணப்பம் கொடுக்கும் பேரணி 07.08.2013

251 views

Loading...

Loading...

Loading...

Rating is available when the video has been rented.
This feature is not available right now. Please try again later.
Published on Aug 10, 2013

தமிழக அரசு தமிழகம் எங்கும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக்கொண்ட வகுப்புகளைத் தொடங்குகிறது. இத்திட்டம் முழுமையாக நிறைவேறினால் பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை மெல்லமெல்ல வெளியேற்றி விடும் நிலை ஏற்படும். இந்த ஆங்கிலத் திணிப்புத் திட்டத்தைத் தமிழக அரசு கைவிட வலியுறுத்தி தமிழகமுதல்வருக்கு கோரிக்கை விண்ணப்பம் அளிக்க சென்னை மன்றோ சிலையிலிருந்து கோட்டையை நோக்கிப் பேரணி 07.08.2013 காலை 10.00 க்கு நடைபெற்றது. இப்பேரணியை தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்க ஒருகிணைப்பாளரும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமானதோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் குணங்குடி அனிபாஅவர்கள் துவக்கிவைத்து பேசினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு வேல்முருகன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு மல்லைசத்திய, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், தந்தைப் பெரியார் திராவிடர்கழகப் பொதுச் செயலாளர் தோழர் கு.இராமகிருட்டிணன், தமிழ்த் தேச விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தியாகு,தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் கா.பரந்தாமன், விடுதலைத் தமிழ்ப் புலிகள்த் தலைவர் தோழர் குடந்தைஅரசன், புதுக்கோட்டை பாவாணன், தமிழர் நீதிக் கட்சி சு.பா.இளவரசன், தமிழ்த் தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர்தமிழ்நேயன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மே பதினேழு இயக்கம்ஒருங்கிணைபாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்நாடு மக்கள் கட்சி செய்தி தொடர்பாளர் தோழர் அருண்சோரி, உலகத்தமிழர் கழக நெறியாளர் பேரா.ம.இலெ.தங்கப்பா, தலைநகர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் புலவர் த. சுந்தரராசன், தமிழ் உரிமைக்கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பானார், மக்கள் கல்வி இயக்கம் பேரா.பிரபா கல்விமணி, மக்கள் நல்வாழ்வுஇயக்கம் தோழர் கண.குறிஞ்சி, இயக்கம் காஞ்சி அமுதன், தமிழக முன்னேற்றக் கழகத் தலைவர் அதியமான் உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்கள் 1000க்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டு கைதாயினர்.

  • Category

  • License

    • Standard YouTube License
  • Suggested by HAAWK for a 3rd Party

  • Song

  • Artist

    • Immediate Music
  • Album

    • THEMES FOR ORCHESTRA & CHOIR 2B
  • Licensed by

    • HAAWK for a 3rd Party (on behalf of Immediate Music Premium); HAAWK Publishing

Loading...

When autoplay is enabled, a suggested video will automatically play next.

Up next


to add this to Watch Later

Add to

Loading playlists...